கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அஸ்லம் என்பவரின் விவசாய நிலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஜே சி பி உரிமையாளர்கள் புதிய வாகனங்கள் விலையேற்றம் மற்றும் உதிரி பாகங்கள் கடுமையான விலையேற்றம் மற்றும் டீசல் விலை ஏற்றம் என்று பலவிதமாக விலை உயர்வு ஏற்பட்டதால் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர்.


இதன் காரணமாக சூளகிரி பொக்லைன் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அதில்,சுமார் மூன்று மணி நேரத்திற்கு ரூ. 4,500.00 ரல் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 1,500.00 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்னிறுத்தி இந்த நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
