விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் கொங்கன்குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது.

இந்த கோழிப் பண்ணையில் ஒரு கட்டிடத்தில் 2,000 கோழிகள் வரை வளர்த்து வந்தார். கடுமையான மின்தடை காரணமாக அங்குள்ள காற்றாடிகள் இயங்கவில்லை. மேலும் கடுமையான வெயில் காரணமாக மேலே ஹாஸ்பிடல் ஓடு போட்டிருந்ததால் வெப்பம் அதிகமாகி 1,000 கோழிகள் கருகி பலியானது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777
