கிருஷ்ணகிரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து வரும் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கிருஷ்ணகிரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்து சிறந்த முறையில் செயலாற்றி வரும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்கள் செயல்பாட்டை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்தும் இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.
மேலும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையில் லாரிகளை நிறுத்துவதை தடுக்க வேண்டும், ராயக்கோட்டை மேம்பாலம் முதல் நீதிமன்றம் வரையில்லான சாலைகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்படுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் டாக்டர் சந்திரமோகன் வழங்கினார்.

அப்பொழுது மூத்த சங்க உறுப்பினர் குமுதா , மாநில மகளிர் அணி செயலாளர் பத்மா, மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட இணை செயலாளர் தில்லை ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ராதா, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சரண்யா, நுகர்வோர் குரல் செய்தி ஆசிரியர் நாகராஜ், வழக்கறிஞர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் முன்னதாக காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு சமுக நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து சமூகப் பணி சிறக்க தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
