தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்துார் துணைவேந்தர்(பொ) அவர்களின் அறிவுறுத்தலின்படி முனைவர்.மு.ரவீந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம், பர்கூர் மற்றும் மத்துார் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தோட்டக் கலை கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை அதிகாரி மு.சை.அனிசா ராணி, மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர்.கி.கீதா அவர்களின் வழிகாட்டுதலின்படி, வறட்சி குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கள ஆய்வின் போது முனைவர். அ.கிருஷ்ணவேணி, முனைவர். கு.சசிகுமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் காவேரிப்பட்டினம் கோ.முனிகிருஷ்ணன், மத்தூர் திருமதி. வானதி, பர்கூர் செந்தில் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து, வாடமங்கலம், புளியம்பட்டி, வீரமலை, கலர்பதி, கமலாபுரம், அத்திப்பள்ளம் மற்றும் ஜம்பு குட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டு வறட்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலக்கடலை பயிர் சாகுபடியை ஆய்வு மேற்கொண்டதோடு, இது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொடர்ந்து, வறட்சியினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed