வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், பசுமத்தூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் 889-ல் உள்ள அரசு புறம்போக்கு மொத்த பரப்பளவான 3 ஏக்கர் 67 சென்ட் நிலத்தில், அதே பகுதியான அர்ஜுனாபுரத்தைச் சார்ந்த பெருமாள் நாயுடு என்பவர் பெயரில் 3 ஏக்கர் 47 சென்ட் நிலம் பட்டாவாக தவறாக மாற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள 20 சென்ட் நிலம் சர்வே எண் 889-ல் அரசு பெயரில் உள்ளது. எனவே, அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் பெயரில் பட்டா வழங்கியதை ரத்து செய்யக் கோரியும், அந்த நிலத்தை பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் விற்பனை, கிரையம், தானம், அடமானம் போன்றவை நடைபெறாத வண்ணம் தடை விதிக்க உத்தரவிடுமாறும் குடியாத்தம் சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
