தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என சிஐடியு கைத்தறி சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி சங்கத் தலைவர் பி.லட்சுமிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்,

தடையில்லா மூலப்பொருள் கைத்தறி நெசவாளர்களுக்கு தங்குதடையின்றி பாவு மற்றும் பட்டு வழங்கிட வேண்டும். மருத்துவக் காப்பீடு கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள ICICI Lombard மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டும்.

மழைக்கால நிவாரணம் ; மழைக்காலங்களில் தறியில் பட்டு நெசவு செய்ய முடியாத சூழல் ஏற்படுவதால், நெசவாளர் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் உயர்வு : நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையான ரூபாய் 1,200-ஐ, 3,000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய அடையாள அட்டை ; நெசவாளர்களுக்குப் புதிய கணக்கெடுப்பு நடத்தி, உரிய அடையாள அட்டைகளை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

ஓய்வூதிய விதிமுறையில் மாற்றம் ; கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 60 வயது வரை நெசவு செய்தால்தான் ஓய்வூதியம் என்ற விதியை மாற்றி, 60 வயதிற்கு மேல் உறுப்பினராக இருந்தாலே ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

கூலி உயர்வு ;
கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு கூலியில் மொத்தம் 20 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நடைபெறவுள்ள மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி சங்க தலைவர் பி.லட்சுமிபதி தமிழாக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *