கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29.08.2026) பள்ளி 8 குழு மறுகட்டமைப்பு – பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக உதவி ஆசிரியர் பூ.இராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் பள்ளி மேலாண்மை குழுவின் அவசியம், அதன் செயல்பாடுகள் மற்றும் தற்போது மறுகட்டமைப்பு செய்வதன் நோக்கம் ஆகியவை குறித்து விரிவாக விளக்கினார். தொடர்ந்து பெற்றோர்களின் பல்வேறு விதமான கருத்துகளுக்குப் பின்னர் வரும் 2026 – 2028 ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாலோசனை நடைபெற்றது.

அதன்படி புதிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வரும் 26.09.2026 அன்று நடைபெற உள்ள கட்டத்தில் முறைப்படி பதவியேற்பு செய்து வைக்கப்படும். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மு. பயாஸ்பாஷா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்திகள் / மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *