கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் ஊழியர்கள் இடம் இருந்து பிடித்த மூலதனம் 4 லட்சத்து 51ஆயிரம் கோடி TDS பணம் ஊழியர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது – வருமான வரி கூடுதல் ஆணையர் ராஜ் மனோகர் பேட்டி


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அருகே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, புதிய நடைமுறைகள் மற்றும் சந்தேகத் தீர்வுகளுக்கான சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் கலந்துகொண்டு வருமான வரி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வருமான வரித்துறை இணை ஆணையர் ராஜ் மனோகர், IRS மற்றும் தாம்பரம் துணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் புதிய வரி விதிப்பு சட்டங்கள் மற்றும் அதன் எளிமைப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்து விரிவுரையாற்றினர்.

அப்போது அதிகாரிகள் பேசுகையில், “மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரித் துறையில், முன்பு நடைமுறையில் இருந்த பழைய வரி முறையில் பல்வேறு முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்கும் சுமை மற்றும் சிக்கலான கணிப்புகள் இருந்தன. ஆனால், புதிய வரி முறை இந்த நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது. HRA, PPF அல்லது இன்சூரன்ஸ் ஆவணங்களை நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டிய அலைச்சல் இனி முற்றிலும் இல்லை. குறைவான படிவங்கள் மூலமாகவே விரைவாக ரீஃபண்ட் தொகையைப் பெற முடியும்” என்று தெரிவித்தனர்.

புதிய வரி திட்டத்தின் கீழ் ₹4 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ₹4 லட்சம் முதல் ₹8 லட்சம் வரை 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.அதேபோல சம்பளதாரர்களுக்குப் பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்படும் வரித் தள்ளுபடி மூலம் ₹12.75 லட்சம் வரை பூஜ்ய வரி வசதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 12 லட்சம் மேல் வருமானம் பெறுவார்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும், அதற்க்கு குறைவாக உள்ளவர்கள் வருமான வரி படிவம் மட்டும் அளித்தால் போதும், அவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

பழைய சட்டத்தில் இருந்த 800-க்கும் மேற்பட்ட பிரிவுகள் சுருக்கப்பட்டு, எளிய மொழியில் 500-க்கும் குறைவான பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.
ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு சிறு தவறுகள் இருந்தால், கடுமையான நடவடிக்கைகள் இன்றி சுலபமாகத் திருத்திக் கொள்ளும் வசதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன.

TDS பதிவு செய்யும் ஊழியர்களுக்கு உடனடியாக பணம் செலுத்துவதற்க்கு ஏதுவாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் உடனடியாக பணம் திருப்பி செலுத்தப்படுகிறது. அதேபோல சர்வதேச பணப் பரிவர்த்தனைகளுக்கான TCS வரி 2%-ஆகக் குறைக்கப்பட்டு வரிச் சுமை தணிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில்,வருமான வரி துறை அலுவலர்கள் கோபி, காஞ்சிபுரம் வருமான வரி அலுவலர் பூரான் சந்த் மீனா, பட்டயக் கணக்காளர்கள் முத்துப்பழனியப்பன், மதுமிதா, ஆனந்த் பசுபதி, சம்பத்குமார், வேணுகோபால், ஜெய்சங்கர், சுரேஷ் மற்றும் எஸ். சிதம்பரம் கோ நிறுவனத்தின் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் கமலக்கண்ணன்
உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

வரி செலுத்துவோர் தவறான தகவல்களைத் தவிர்த்து, வெளிப்படையான முறையில் வருமானக் கணக்கை தாக்கல் செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய அதிகாரிகள், இத்தகைய சீர்திருத்தங்கள் சாமானிய குடிமகனும் எந்தவித சுமையுமின்றி எளிதாக வரி தாக்கல் செய்ய பெருமளவில் உதவும் எனத் தெரிவித்தனர்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *