மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆர் வி நகரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 26 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் விக்னேஸ்வர பூஜையுடன் மகாயாகம் தொடங்கியது மங்கள இசை உடன் தொடங்கிய யாகம் பூர்ணஹுதியுடன் நிறைவு பெற்ற நிலையில் செல்வ விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 27 ம் தேதி காலை எட்டு முப்பது மணி அளவில் மங்கல இசையுடன் இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது 11 மணி அளவில் பூர்ணாஹுதியுடன் இரண்டாம் காலயாக பூஜை நிறைவு பெற்று தீர்த்த குடங்களுடன் அர்ச்சகர்கள் யாக வேள்வியை சுற்றி வலம் வந்தனர் பின்னர் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஆர்வி நகர் மற்றும் வாடிப்பட்டிபொது மக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed