ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 32) இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் கார்மென்ஸ்ல் வேலை பார்த்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கோயம்புத்தூருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசாரிம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வியாபாரியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி வியாபாரி கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 8,000 அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
