ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டாரத்திலுள்ள கே.கே. திருமண மஹாலில் வேளாண்மை துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு , கண்காட்சி நடைபெற்றது.
பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் , விவசாய பெருமக்கள், வேளாண் துறை அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் , முன்னோடி விவசாயிகள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.
வேளாண்மை துணை இயக்குநர், பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம் கு.இராஜேந்திரன் கருத்தரங்கு கண்காட்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு கண்காட்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுருபிரபாகரன் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:
விவசாய பெருமக்களே, வேளாண்மையின் முதுகெலும்பு, விவசாயிகள், இக்கண்காட்சியில் , கருத்தரங்கில் கலந்து கொண்டு வேளாண்மையில் செயல்படுத்தபட்டுள்ள வேளாண் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சி தலைவர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தொழிலுநுட்ப கண்காட்சியினை பார்வையிட்டார். இதில் வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் அவசியம் மணிவளம், உயிர்மஉரம், உயிரியல் காரணிகள் மூலம் பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாய பொருட்களுக்கான, ஏற்றுமதி சந்தைவாய்ப்பு, பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டுதல், நெல் இரகங்கள் , சிறுதானிய பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் எஸ். வாசுகி முன்னிலை வகித்தார்.
அவர் விவசாயிகளிடையே, உயிர்உரங்களின் பயன்பாடு, ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், மதிப்பு கூட்டிய சிறுதானியங்கள், பாரம்பரிய வேளாண்மை முறைகள் குறித்து பேசினார்.
மாவட்ட கருத்தரங்கு , கண்காட்சியில் வேளாண்மைத் துறையில் வைக்கப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியில் நெல்-ஜெயராமன் பாரம்பரிய நெல் இரகங்கள் குறுகிய கால நெல் இரகமான அறுபதாம் குறுவை பற்றி விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு கலந்துரையாடினர்.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம்.கே.அமர்லால் பொட்டாசியம் குளோரைடு விதை நேர்த்தி பற்றி விவசாயிகளிடம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் பொ.இராஜா திரவ உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் கூறினார்.
உதவி இயக்குநர் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை நாகராஜன் மண்ணின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளிடம் கூறினார். ராமநாதபுரம் மாவட்ட நுண்ணீர் பாசனத் திட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் இராஜலெட்சுமி நுண்ணீர் பாசன மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் பயிர் காப்பீடு கீதாஞ்சலி பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளிடம் கூறினார்.
ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் முனைவர்.முத்துராமு, முனைவர்.ஜெகதீசன் , முனைவர்.விஜயராகவன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பாரம்பரிய நெல் இரகங்கள் குறித்து அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய : 📱99527 87998.
தோட்டக்கலை துறை சார்ந்த காய்கறி விதைகள் குறித்து அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்:📱72007 73224 . சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் , வேளாண் இடுபொருட்களான மீன் அமிலம், பஞ்சகாவ்யா, மூலிகை பூச்சி விரட்டி, அக்னிஅஸ்திரா, அமிர்தகரைசல் குறித்து அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 📱93455 18559 .

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டத்தை சார்ந்த பரமக்குடி, நயினார்கோவில், போகலூர், முதுகுளத்தூர், கமுதி , கடலாடி வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் சீதாலெட்சுமி
நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
