விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் கிராமம், மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த கணேசபாண்டி (49), மற்றும் அவரது மகன் கௌதம் (20) இருவரும் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கி கொண்டிருந்தனர். அப்போது அருகில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒரு கும்பல் வீடு புகுந்து தந்தை கணேசபாண்டி மற்றும் மகன் கௌதமை வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

அதில், இருவரும் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டு ஆத்திரமடைந்த கணேசபாண்டி மற்றும் அவரது உறவினர் தரப்பைச் சேர்ந்தவர்கள் அறிவாளால் வெட்டிய கும்பல் வசித்த பகுதிக்கு சென்று அங்கிருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் இப்பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து அப்பகுதி முழுவதும் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் அத்துடன் அறிவாளால் வெட்டி தப்பி ஓடிய கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மோதலுக்கான காரணம்:

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமண ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு சமாதான கூட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. ஆனாலும் அதில் சிலருக்கு உடன்பாடு ஏற்படாததால் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் / தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed