மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டி வந்த நிலையில் சில தனி நபர்களின் தூண்டுதல் காரணமாக அதிகாரிகள் கால்வாய் கட்டும் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் கட்ட வலியுறுத்தி கொசவட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால், அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை தொடங்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லம்பட்டி யூனியன் அலுவல வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 10 மணி முதல் 11 மணி வரை யூனியன் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. யூனியன் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என பத்து நாட்களுக்கு முன்பு சுவரொட்டிகள் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் பணிகளை தொடங்கவோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் செல்லம்பட்டி யூனியன் அலுவலக வாசலில் அமர்ந்து அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முருகன் கூறுகையில் ; ஏற்கனவே செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் மூலம் பணிகள் தொடங்கப்பட்டு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் பணிகளை நிறுத்தியது ஒருதலைப் பட்சமானது, மேலும் தனி நபருக்கு ஆதரவாக விக்கிரமங்கலம் காவல்துறை மற்றும் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செயல்படுவதாகவும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகளை தொடர்ந்து செய்து வந்த நிலையில் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் அதாவது 16 / 9 / 2026 அன்று பணிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

மேலும் அதிகாரிகள் கூறியபடி பணிகளை தொடங்கா விட்டால் அடுத்தடுத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed