ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 714 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அனுவவர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் , வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்ததாவது :
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும் , பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி நிவேதா ஸ்ரீ, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலாள ஜூடோ போட்டியில் இரண்டாம் இடமும், ராமநாதபுரம் பாட்டலியான ஜூடோ போட்டியில் முதல் இடமும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து பதக்கம் , கேடயத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார் .
மேல் நிலைப்பள்ளிகளில் பயின்று அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்து கல்விக் கட்டணம் செலுத்த இயலாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளுக்கு உதவி புரிவதற்கு நன்கொடையார்கள் , தன்னார்வலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களிள் சமூகப் பொறுப்பு நிதி மூலம் கல்லி உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மீன்வளம் , மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மண்டல ராமநாதபுரம் அவர் வேண்டுகோளின் படி, மானாமதுரையில் இயங்கி வரும் அப்வா அலி நிறுவனம், நடப்பு கல்வியாண்டில் ரூ.3.50 இலட்சம் கல்வி உதவித்தொகை வழங்க ஒப்புதழ் அளித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, அக்குவா அக்ரி நிறுவன முதல்நிலை மேலாளர் த. செந்தில்ராஜன் , வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தற்போது ராஜா கலை, அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் 1.செல்வி ஹரிணி ரூ.16,000- 2.செல்வி ரபியா பேகம் ரூ.16,000 3.செல்வன்.எம்.சக்தி முனிஸ்வரன் ரூ.19,000,

4 செல்வி.எஸ்.சிவரஞ்சனா ரூ.16,000, செல்வி.ஜே. சவாரி.௹ .16,000 என 1 மாணவர், 4 மாணவியர்களுக்கு கட்டணத்தைச் செலுத்தும் வகையில் கல்வி உதவித்தொகையை வழங்கினார். இந்த நிதியுதலி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவருரு பிரபாகரன் பாராட்டுகள் , வாழ்த்துகளை தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகம் ,ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ. ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் , மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளர் லோ,ஜேன் கிறிஸ்டிபாய் , மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் , ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நல அலுவலர் வீ. கங்காதேவி , செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
