மதுரை மாவட்டம் சோழவந்தானில் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் பழமை வாய்ந்த ஜெனக நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்லும் நிலையில் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்ததாக கூறினார்கள்.
மேலும், கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாரியம்மன் மற்றும் ஜெனக நாராயண பெருமாள் கோவில் முன்பு இருந்த கடைகள் அகற்றப்பட்டது.

இதனால், கோவிலுக்கான இடங்கள் விஸ்தாரமாகி பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து சென்றனர். மேலும் ஜெனகை மாரியம்மன் கோவில் முதல் பெரிய கடை வீதி பேருந்து நிலையம் வரை இரு பக்கமும் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி பேருந்து வந்து செல்ல தேவையான நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறையினர் எடுக்க வேண்டும்.
மேலும் சோழவந்தான் காவல் துறையினர் தினசரி காலை, மாலை காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரப்புகள் செய்யாதவாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை தனியாக விளம்பர போடு வைத்து தெரிவிக்க வேண்டும் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான அனுமதி வழங்கக் கூடாது அதற்கான மாற்று இடங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினார்கள்.

கோவில் முன்பு உள்ள கடைகள் அகற்றிய அறநிலையத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பக்தர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர் இதேபோன்று கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
