திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி 9வது வார்டு அம்மா நகரில், W-9, P-328, P-329, P-330, P-331, P-332 எண் கொண்ட மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்தில் விழுந்து விடுமோ என்ற அச்சத்திலேயே இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர்.
வரும் மழைக்காலங்களில் சிறிய காற்றுக்கே இந்த மின்கம்பாங்கள் விழுந்து விடும் நினைவில் தான் இந்த அனைத்தும் உன் கம்பங்களும் இருக்கின்றன. இது குறித்து புகாரை பூவிருந்தவல்லி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அவர்களிடம் நேரில் சென்று பலமுறை சொல்லியும் மெத்தன போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.




மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்க கூடிய இந்த குடியிருப்பு பகுதியில், மிகவும் நெரிசலான மக்கள் வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. அடுத்து வரக்கூடிய மழை காலங்களில் இந்த மின்கம்பங்கள் கண்டிப்பாக சேதம் அடைந்து விழுந்துவிட கூடிய சூழ்நிலை உள்ளது. ஆகவே, இந்த மின் கம்பங்களால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, விரைந்து பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்திட வேண்டும், என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.




சமூக ஆர்வலர் : ந. கோதை ஜெயராமன் வரதராஜபுரம், நசரத்பேட்டை ,
எதிரொலி.இன் / 8939476777
