கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் புதிய நிர்வாகிகளை சமூக நுகர்வோர் பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நியமனம் செய்து 100 நாள்களை நிறைவு செய்துள்ள தமிழக முதல்வருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்புச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கே.எம்.சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராக சதீஷ் என்பவரை டாக்டர் சந்திரமோகன் நியமனம் செய்து அதற்கான நியமன கடிதத்தினையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக
சிவ சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரவன்,
மாவட்ட துணை தலைவராக சுந்தரேசன், இணைச் செயலாளராக வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளராக அரவிந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினராக தில்லை ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினராக வினித் சர்மா, மாவட்ட மகளிர் அணித் தலைவியாக திருமதி ராதா, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியாக யாதவி, திருமதி சரண்யா ஆகியோரை நியமானம் செய்து அதற்கான கடிதத்தினையும் வழங்கினார்.
தொடர்ந்து சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பேசும்போது …..
புதியதாக பொறுப்பேற்றுள்ள தாங்கள் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்திற்கு சிறப்பாக பணியாற்றிடவும், பொதுமக்களுக்கு பொதுசேவை செய்திடவும் ஆர்வமுடன் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்து பல்வேறு திட்டங்களை 100 நாள்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சமூக நுகர்வோர் பாது காப்பு நலச்சங்கத்தின் சார்பில் தனது பாராட்டையும் நன்றினையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த பதிவி ஏற்பு விழாவில் மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
