திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில்
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சார்பில், மீஞ்சூர் வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மீஞ்சூர் வட்டாரக் கிளையின் தலைவர் கி.ஜெயராஜ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஜெ.பாண்டியராஜன் வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஔ.மகராஜன், முன்னாள் வட்டார செயலாளர் வ.சந்திரசேகர் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அன்புமலர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மகளிர் வலையமைப்பு செயலாளர் த.விஜயலட்சுமி நன்றி கூறினார். இதில், சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
