ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் - மாணவியர்களால் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  பள்ளியிலிருந்து துவங்கி நகரின் பிரதான சாலை, நெடுஞ்சாலை, ஆர்ச் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது.
   
முன்னதாக பேரணியை பள்ளியின் முதல்வர் அருட் சகோதரி ஸ்டெல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் மாணவர் -- மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி நடந்து சென்றனர். நிகழ்ச்சியை பள்ளியின் போதைப் பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு மன்றம் , உடற்கல்வி ஆசிரிய பெருமக்கள் வழிநடத்தினர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed