மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் ஒரு தள்ளு வண்டிகள் வைத்து பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயினை அணைத்தனர். தீ விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed