பொன்னேரி அருகே உள்ள அனுப்பம்பட்டு கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் கோயில் இருந்து வருகிறது. இந்த கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், பட்டியல் சாராத கோயிலாக இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களை அனுப்பம்பட்டுக்கு அருகே உள்ள கிராமமான ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிலத்தை பயன்படுத்தி வந்ததற்கு குத்தகை வழங்கவில்லை.

இதற்கிடையே, அந்த கோயில் அறங்காவலராக இருந்து வந்த அறங்காவலர் சின்னி கிருஷ்ண நாயுடு என்பவரும் இறந்துவிட்ட நிலையில், அந்த கோயிலுக்கு பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்த முடியாமலும், பூசாரிக்கு மாதாமாதம் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையும் இருந்து வந்தது.
அந்நிலையில், அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்த உமாமகேஸ்வரன் 2013 ம் ஆண்டிலிருந்து மின் கட்டணத்தை மாதாமாதம் செலுத்தியதுடன் பூசாரிக்கு ஊதியத்தையும் தடையின்றி வழங்கி கொண்டு இருந்தார். மேலும், பூஜைகளும் தடை இன்றி தொடர்ந்து நடைபெறுவதற்கு பெரும் உதவியாகவும் இருந்து வந்தார். அது மட்டும் இல்லாமல், 2022 ம் ஆண்டு அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகமும் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கோயில் நிலத்தை பயன்படுத்தி வந்த குத்தகைதாரர் ஆர்.எம்.ஆர்.ஜானகி ராமன் அவர்களிடம் கோயில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் பலர் நேரடியாக சென்று குத்தகை பாக்கியை கேட்டும் அவர் தர மறுத்துவிட்டார்.

இந் நிலையில், 2023 ம் ஆண்டு கோயில் நிலத்தின் குத்தகைதாரர் பாஜக கட்சியின் தேசிய பொறுப்பாளர் என்பதால் அவருடைய செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி அந்த கோயிலுக்கு அவருக்கு சாதகமான ராஜேந்திரன் என்ற ஒருவரை அறங்காவலராக நியமனம் செய்து வைத்தார். அதற்கு கோயிலின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை, அதற்கு காரணம் அப்போதைய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு அவர்கள் நேரடியாக பாஜக தேசிய நிர்வாகி ஜானகிராமன் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தார் என்பதுதான்,

இருந்தாலும், விசிக கட்சியை சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் விசிக கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் அவர்களின் உதவியுடன் (24/05/25 அன்று) அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களிடம் முறையிட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அறநிலைத்துறை அதிகாரிகளை கடுமையாக கண்டித்ததுடன், ஆக்கிரப்பு நிலத்தை உடனடியாக மீட்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, பின்னர் மறுநாளே அந்த இடத்தை மீண்டும் யாரும் ஆக்கிரமிக்க கூடாது என அறிவிப்பு பலகையையும் நட்டு வைத்தனர். மேலும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்த ஜானகிராமன் அவர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸும் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், குத்தகைதாரிடம் இருந்து ஏற்கனவே அறங்காவலர் 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டதாக அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வழங்கினர். ஆனால், அறங்காவலர் கோயில் நிர்வாகிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் இதுவரை அதற்கான எந்த கணக்குகளும் காட்டவில்லை. மேலும், குத்தகைதாரர்களிடம் ராஜேந்திரன் கையூட்டு பெற்று கொண்டு, அந்த கோயில் நிலத்தை ஏற்கனவே ஆக்கிரமித்து இருந்த ஜானகிராமன் அவர்களே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதற்கு உதவியாக இருந்து வருகிறார்.


இந்நிலையில், பாலகிருஷ்ணன் அறங்காவலரை தொடர்பு கொண்டு பேசிய போதும், நேரில் சென்று பேசிய போதும் “அந்த கோயில் நிலத்தை நான் ஏலம் விட்டு விட்டேன் ” என கூறியிருக்கிறார். அதற்கு, ” அவர் நீங்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு உடந்தையாக தான் இருக்கிறீர்களே தவிர, ஏலம் விடவில்லையே ” என கேட்டதற்கு, “இல்லை, இல்லை ஏலம் விட்டிருக்கிறோம் ” என அடித்து பொய் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, பாலகிருஷ்ணன் விசிக நிர்வாகிகள் மூலமாக, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச செய்ததின் மூலமாகவும், அவர் அறிவுரையின்படி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தேவராஜன் அவர்கள் வாயிலாக, தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கும், இணை ஆணையர் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த கோயில் நிலத்தை தற்போது ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, இந்த மாதம் 12ம் தேதி அனுப்பம்பட்டு முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான 5 சர்வே எண்களில் இருக்கக்கூடிய இடங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
