கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 06.08.2026 முதல் 08.08.2026 வரை கருப்பு பட்டை அணிந்து காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை செவிலியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு குரல் எழுப்பும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இப்போராட்டத்தின் 3 அம்ச பிரதான கோரிக்கைகள் ;

  1. RE DEPLOYMENT ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை எண் 204-ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
  2. தொகுப்பூதிய முறையை அரவே ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
  3. Staff Nurse என்றவ்பதவி பெயரை Nursing Officer என பெயர் மாற்றம் செய்து, செவிலியர்களுக்கான Job Description அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

இந்த போராட்டம் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடைபெற்று வருகிறது. அனைத்து அரசு செவிலியர்களும் தங்களது பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டு, கருப்புப் பட்டை அணிந்து மட்டுமே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு, செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் அரசு நர்சுகள் சங்கம், செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், செவிலியர் தனலட்சுமி, செவிலியர்.ஸ்ரீ தேவி, செவிலியர். பாலமுருகன், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கவன ஈர்ப்பு குரல் எழுப்பும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed