4 கி.மீ விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்து வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், விபத்தில் வாலிபர் பலி 10க்கும் மேற்பட்டோர் காயம் ;

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மதுபோதையில் லாரியை இயக்கி 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் லாரியை ஓட்டி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சோழவந்தான் அருகே
நகரி பகுதியிலிருந்து தனியார் பால் நிறுவன வாகனத்தை விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (29) என்பவர் மது போதையில் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் அலங்காநல்லூர் அருகே ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் டூவிலரில் நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டி மகன் சோலை ராஜா என்பவர் மீது மோதிவிட்டு அங்கிருந்து லாரி நிற்காமல் சென்றது.

இதனையறிந்த பொதுமக்கள் லாரியை நிறுத்த முயன்ற போது லாரியை ஜெயப்பிரகாஷ் நிறுத்தாமல் எதிரே வாகனங்களில் வந்தவர்கள் பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது லாரியால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் கொதித்தெழுந்த பொது மக்கள் லாரியை பின்தொடர்ந்து நத்தம் – மதுரை சாலையில் மடக்கி பிடித்து ஓட்டுநர் ஜெயப்பிரகாசை சாரமாரியாக தாக்கியதுடன் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

மது போதையில் வாகனத்தை ஒட்டிய டிரைவர் ; ஜெயப்பிரகாஷ்

விபத்தில் காயமடைந்த சோலைராஜா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மதுபோதையில் 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் இப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed