ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் அந்த பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 31) வாலிபரான இவரிடம் ஆன்லைன் மூலம் பழக்கமான அருண்குமார், விஜயகுமார் மற்றும் இளம்பெண் ஒருவர் ஆகிய மூவர் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் அதை பயன்படுத்தி அரசு பணிதருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் அய்யனாரிடமும் அய்யனாரின்
உறவினர்கள் மற்றும் பழக்கமானவர்களிடம் நேரடியாகவும் வங்கி மூலமாகவும் பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் அரசு வேலை வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் தெரிகிறது, இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யனார் பணத்தை திருப்பி தராமல் நம்பிக்கை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மம்சாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் எண் இரண்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நடுவர் எண் இரண்டு நீதிமன்றம் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மம்சாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டது இதன் அடிப்படையில் மாம்சாபுரம் காவல் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி 8939476777
