ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :
வரும் 10.08.2026 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம்-2026 நடைபெறவுள்ளது.
முகாமில், ஐந்திற்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம் , தமிழ்நாடு அரசு பனிமனை) , ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் நேரடியாக பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்யவுள்ளதால் இதில் 8- 4 ஆப்ஷனல் டி.ரேட் , 10- 4 ஆப்ஷனல் டிரேட் , 12- ஆப்ஷனல் டிரேட் , ஐடிஐ - என்சிவிடி எஎஸ் சிவிடி- டிசைன்னேடட் டிரேட் , கலை , அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக கலந்து கொள்ளலாம் .
மேலும், விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி , - 04567-231075, 94990 55772, 94868 18233, 87781 34117 ஆகிய எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார் /
மாவட்ட செய்தியாளர்
