இளைஞர்கள், ஆண்கள் , பெண்கள் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாகி நாள்தோறும் கொலை, பாலியல் போன்ற கொடுஞ்செயல்கள் நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது.
இதனிடையே, சமீபத்தில் அண்ணாமலை தலைமையில் துவங்கிய வீ த லீடர்ஸ் அமைப்பினர் போதையை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க , வீ த லீடர்ஸ் சார்பில் பரமக்குடி லேனா மஹால் பகுதியில் இருந்து

” போதையை ஒழிப்போம் . ” ,
” புதிய தலைமுறை காப்போம் . ” எனவும், போதையற்ற சமூகம் – நமது இலக்கு என்பதை வலியுறுத்தி வீ த லீடர்ஸ் பொறுப்பாளர்கள் , உறுப்பினர்கள், பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஐந்து முனை பகுதி, மதுரை — இராமேஸ்வரம் நெடுஞ்சாலை, ஆர்ச் பகுதி, காந்தி சிலை பகுதியை சென்றடைந்தது.
போதையை ஒழிப்பது குறித்து உரையாற்றினர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
