விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சன்சிகாபுரம் சங்கரபாண்டியபுரம் அய்யனாபுரம் பகுதியில் சாலியர் சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் பாரம்பரியமிக்க முளைக்கட்டு திருவிழா ஆடி மாதம் 5 தினங்கள் கொண்டாடுவது வழக்கம்.


இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் திருவிழா தொடங்கியது. சத்திரப்பட்டி வடக்கு தெரு, சத்திரப்பட்டி நடுத்தெரு, புதுத் தெரு மற்றும் சமுசிகாபுரம் போன்ற பகுதிகளில் முளைக்கட்டு அம்மன் வைத்து 5 தினங்கள் வழங்கி கொண்டாடி மகிழ்வார்கள். அவரவர் வீடுகளில் முளைப்பாரி வளர்த்து அம்மனுக்கு வைத்து கும்மி போன்றவைகள் அடித்து 5 தினங்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.
சத்திரப்பட்டி உள்பட அப்பகுதி உள்ள கிராமங்களில் உள்ள நெசவாளர்களுக்கு போனஸ் மற்றும் விடுமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கி கொண்டாட்டம் நடைபெறும். ஜெய மாரியம்மன், யோகா மாரியம்மன், செல்வ மாரியம்மன், செல்ல மாரியம்மன், சடை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் கோவில்களில் வைத்து தரிசனம் செய்வார்கள்.


பின்னர் கடைசி நாளில் ஒவ்வொரு தெருவாக ஒருவர் பின் ஒருவராக முளைப்பாரிகளை சுமந்தபடி வந்து ஜமீன் நத்தம் பட்டி சாலையில் உள்ள துரை மடம் அருகே உள்ள கிணற்றில் அதை கரைத்து விட்டு திரும்புவார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் முளைப்பாரிகளை சுமந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். இந்த திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டமாக கூடி பார்த்து தரிசனம் செய்வார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜபாளையம் டிஎஸ்பி பசினா பீவி தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஊர்க்காவல் படையினர் என 500க்கும் மேற்பட்ட காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முளை கொட்டு திருவிழாவை முன்னிட்டு பல இடங்களில் அன்னதானமும் நீர்மோர், சர்பத் போன்ற பானகங்களும் இலவசமாக வழங்கினார்கள்.
செய்திகள் ; ராமகிருஷ்ணன் / எதிரொலி ; 8939476777
