மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராசு – மாரியம்மாள் இவர்களின் இரண்டாவது மகன் சஞ்சய் குமார்(23) இவருக்கு திருமணம் ஆகி மனைவி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இவர் கடந்த 10 நாட்களாக சோழவந்தான் அருகே தென்கரைப் பகுதிகளில் உள்ள தேங்காய் குடோனின் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம் போல் இன்று தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்த நிலையில் மாலை 4 மணியளவில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தேங்காய் குடோனுக்குகள் புகுந்து சஞ்சய்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர் தலையில் பலத்த காயம் அடைந்த சஞ்சய் குமார் அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

அப்போது தேங்காய் கடையில் பணியில் இருந்த பெண்கள் இந்த சம்பவத்தை பார்த்தவுடன் அலரி அடித்து வெளியே ஓடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காடுபட்டி காவல்துறையினர் இறந்த சஞ்சய் குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் கொலை நடந்த இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் தேவநாதன் சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து காடு பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ச்சியாக முள்ளிப்பள்ளம் தென்கரைப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் உள்ளனர் பழிக்கு பழியாக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் ; காளமேகம்/ எதிரொலி / 8939476777
