மதுரை மாவட்டம் சோழவந்தானில் காவிரி உரிமை கையெழுத்து இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தபால் மூலம்
மனு அனுப்பப்பட்டது.
காவேரி உரிமையை பாதுகாப்போம் கர்நாடகா அரசு தீர்ப்பின் படி பற்றாக்குறை கால காவேரி பங்கிட்டு நீரை கூட தமிழ்நாட்டுக்கு திறந்து விடாத நிலையில் குருவை மற்றும் சம்பா நெல் சாகுபடி செய்ய முடியாமல் உள்ள தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும் காவிரி நடுவர் மன்ற
தீர்ப்பின் படி, தமிழ்நாட்டுக்குரிய காவேரி நீர் திறக்கச் இயலாத காவேரி மேலாண்மை ஆணையத்தை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் மேகேதாட் அணை கட்டுமான திட்டத்தை தடை செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மதுரை மாவட்ட குழுவின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வாடிப்பட்டி தாலுகா செயலாளர் மாரியப்பன் துணைச் செயலாளர் பெரியசாமி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதி ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் விருமாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ஜி சந்தனம் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
