மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தச்சம்பத்து கிராமத்திற்கு முன்பு சாலையின் வலது புறம் ஒரு ஆள் உள்ளே சென்று வரக்கூடிய அளவு பள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகும் நிலையில், நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளாததால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளமானது மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மழை பெய்த காரணமாகவும் வாகனங்கள் அதிகம் சென்றதன் காரணமாகவும் பள்ளம் அதிகமாகி ஒரு ஆள் பள்ளத்திற்குள் இறங்கி உள்ளே சென்று வரக்கூடிய அளவு காணப்படுகிறது இது குறித்து பலமுறை பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் செய்திகள் வெளியிட்ட நிலையில் தற்போது வரை பள்ளத்தை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்;

பள்ளத்தால் உயிர் சேதம் ஏற்பட்ட பின்பு தான், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா ?என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாலைகளில் சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டவுடன் சரி செய்யாமல் பெரிய அளவு விபத்து ஏற்பட்டவுடன் மொத்த துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு செய்வது தேவையற்றது. என கூறும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக தச்சமுத்து அருகில் உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும். இதே போன்று சோழவந்தான் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு வாரத்திற்குள் சரி செய்யாவிட்டால் தச்சம்பத்து கிராம பொதுமக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் செய்யப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed