திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தலைமையாசிரியர் வா.பாலமுருகன் தலைமையில் நடைப்பெற்றது. ,
மாவட்ட நாட்டு நல பணி திட்ட அலுவலர் கேசவலு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் , பூண்டி வான சரக அலுவலர் மற்றும் பள்ளி மேலான்மை குழு உறுப்பினர் (கல்வியாளர் ) எ.முனுசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு மரம் வளர்பதன் அவசியம் குறித்து விவரித்தனர்.

பள்ளி வளாகம் முழுவதும் 125 மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் கணினி ஆசிரியர் த.நவீன்குமார் நன்றி கூறினார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
