முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கபட்டது...
திருவள்ளுர் மாவட்டத்தின் வட கடலோர பகுதியும், தமிழகத்தின் கடைக்கோடியாகவும் உள்ள பெரிய மாங்கோடு பகுதி மீனவ கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் மாவட்டத்தில் 3-ம் இடமும், அந்தப் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தங்களது சொந்த செலவில் பாராட்டு விழா நடத்தினர்.

கடந்த 2025-26-ஆம் ஆண்டில் 9-ம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், தேர்வில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அப்போது பேசிய சார் ஆட்சியர் அப்துல் ராசிக் அவர்கள் கூறியதாவது ;
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் திருவிழா போன்று நடத்துவது பாராட்டுக்குரியது எனவும், தென்கோடியில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம், நன்றாக படித்ததால், பின்னாளில் விஞ்ஞானியாக, குடியரசு தலைவராக உயர்ந்தார் எனவும், கல்வியை மட்டும் எந்த சூழலிலும் விட்டு விட கூடாது எனவும், “பிச்சை புகினும் கற்கை நன்றே” என கல்வியின் அவசியத்தை அவ்வையார் கூறியதாகவும், ” இன்று வரும், நாளை செல்லும் செல்வம், நிரந்தரமானது அல்ல, கல்வி செல்வம் தான் நிரந்தரம் ” எனவும் தெரிவித்தார்.


பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் வரவேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழ் மணி, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில ஆலோசகர் பெரிய மாங்கோடு மோகன், தொழிலதிபர் ரமேஷ்-குருமூர்த்தி, கிராம நிர்வாகிகள் சாமிதுரை, தேசப்பன், குணாளன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் விக்னேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
