பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த மரங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் அதிக அளவில் புள்ளி மான்கள் வாழ்ந்து வருகின்றன. பழவேற்காடு பகுதியில் இருந்து எண்ணூர் பகுதி வரை சில ஆண்டுகளாக துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம், எண்ணை நிறுவனங்கள், வடசென்னை அனல் மின் நிலையம், உட்பட பல விதமான தொழிற்சாலைகள் உருவாகிவிட்ட காரணத்தால், அப்பகுதிகளில் இருக்கக்கூடிய மரங்கள் உட்பட அடர்ந்த செடி, கொடிகளும் அகற்றப்பட்டுவிட்டது.

அதனால், அப்பகுதியில் வாழ்ந்து வந்த மான்கள் இரைகளை தேடியும் மற்றும் தண்ணீர் தேடியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், காட்டூர், தத்தமஞ்சி உட்பட அதை சுற்றி உள்ள பல கிராம பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் பகுதியில் மரம், செடி கொடிகள் அடர்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக வெளியில் வந்த போது, அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டி இருக்கிறது.

அப்போது நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றுவதற்காக அப்பகுதி இளைஞர்கள் நாய்களை விரட்டி கொண்டு ஓடி இருக்கிறார்கள். மான் தண்ணீரில் இறங்கி ஓட முயன்ற போது தொடர்ந்து ஓட முடியாமல் நாய்களிடம் சிக்கிவிடவே, அந்த நாய்கள் கடித்து குதறி தள்ளி விட்டன. பின்னர், அருகில் சென்ற அப்பகுதி இளைஞர்கள் நாய்களை விரட்டி அடித்துவிட்டு பார்த்த போது, மானின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்து குதறிய காயங்கள் இருந்தது.


பின்னர், அந்த இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, அவர்கள் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து இறந்து போன மானை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீஞ்சூரை சுற்றி வாழ்ந்து வரக்கூடிய மான்களுக்கு, வனத்துறையினர் ஏதாவது ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், நன்றாக இருக்கும் என்ன பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777

