வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, லயன்ஸ் சங்க அலுவலகம், குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.ரவீந்திரன் தலைமையிலும், மாவட்ட தலைவர்கள், ஜெ.பாபு, ஜேஜிநாயுடு காசி விஸ்வநாதன், சங்க முன்னாள் தலைவர் உதயகுமார் வெங்கடசன் முன்னாள் செயலாளர் எஸ். விவேகானந்தம் ஆகியோர் முன்னிலையுலும் இந்தப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3241H மாவட்ட முன்னாள் மாவட்ட ஆளூநர் பி.நந்தகோபால், இந்த ஆண்டின் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்துறை வழங்கி சிறப்பித்தனர் முன்னாள் மாவட்ட ஆளூநர் சி. புவனேஸ்வரி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். 2026 – 27ஆம் ஆண்டின் தலைவராக பிரம்மாஸ் ஆர்.பி. செந்தில், செயலாளராக ஆசிரியர் சி.அருள்பிரகாசம், பொருளாராக கே. ஆறுமுகம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241H மாவட்டத்தின் 2ம் துணை ஆளூநர் கே. பொன்னம்பலம், நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்

மேலும், மாவட்ட அவைசெயலாளர் சி. புருஷோத்தமன் மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டி. ரங்கராஜன் மாவட்ட சங்க விரிவாக்க தலைவர் டாக்டர். என்.வெங்கடேஸ்வரன், மாவட்ட தலைவர்கள் சிவஞானம், சிவசக்தி, எம்.கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இதில் மாவட்ட தலைவர்கள் ஏ.சுரேஷ்குமார் டி. கமலஹாசன் மண்டல தலைவர் திலகர் வட்டார தலைவர்கள் ஸ்ரீதரன் முன்னாள் தலைவர் எம்.கார்த்திகேயன் என்.எஸ். விவேகாநந்தன் முன்னாள் பொருளாளர் ஏ.வேல்முருகன் உறுப்பினர்கள் டி.பிரவீன்குமார் விசிடி சிவகுமார் கருனாகரன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இதில் நலதிட்ட உதவியாக குடியாத்தம் நகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் புடவைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தினசரி அன்னதானம் வழங்கும் 2.சேவை அறக்கட்டலைகளுக்கு தலா 1 மூட்டை அரிசி வழங்கப்பட்டது.

மேலும் பாலிடெக்னிக் பயிலும் மாணவி ஜிபிகா 9ம் வகுப்பு படிக்கு மாணவன் அர்ஜூனன் ஆகிய 2 நபர்களுக்கு தலா ₹3ஆயிரம் வழங்கி சிறப்பிக்கபட்டது. இறுதியில் பொருளாளர் கே. ஆறுமுகம் நன்றியுரையாற்றி விழா நிறைவுபெற்றது.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed