ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் 30 நிமிடங்களுக்கு மேலாக மிதமான மழை பெய்தது. மாலை முதல் இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையம் அருகே மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரம் சாலையில் சாய்ந்து அவ்வழியே சென்ற ஆட்டோ மீது விழுந்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் ராகுப் அப்துல்கனி(42) காயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் சாய்ந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777
