கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு நிறப்பும் ஆலையில், எச்பிசிஎல் 52-வது நிறுவன தினத்தை ஒட்டி எல்பிஜி ஆலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டல சில்லறை விற்பனைப் பிரிவு முதன்மை மேலாளர் நூகேஷ் பாபு கும்மிடிப்பூண்டி ஆலை முதன்மை மேலாளர் அருண் குமார் கலந்து கொண்டனர். முகாமில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் சௌமியா ஆகியோர் கலந்துகொண்டு, ரத்ததானம் வழங்குவதால், ரத்த தானம் செய்யக்கூடியவர்களுக்கு உடல் அளவில் ஏற்படக்கூடிய நன்மைகளை குறித்து, எடுத்துக் கூறினர்.

இம்முகாமில், 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். பின்னர் சிறப்பு அழைப்பாளர்கள் ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதனை தொடர்ந்து தொழிற்சாலை தினத்தை ஒட்டி நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

செய்திகள் ; யாகோப் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed