நலவாரிய புதிய உறுப்பினர் சேர்த்தல், சாதிச் சான்றிதழ் ஆதார் அட்டை , குடும்ப அட்டை இணைய வழி வழியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல் .
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;
தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரிய புதிய உறுப்பினர் சேர்த்தல், தூய்மை பணியாளர் நலவாரிய புதிய உறுப்பினர் சேர்த்தல் , தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, பழங்குடியினர்/நரிக்குறவர் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை , குடும்ப அட்டை இல்லாத பழங்குடியினர் , நரிக்குறவர் மக்கள் இணையவழி வாயிலாக விண்ணப்பித்து மேற்கண்ட சான்றிதழ் பெறுவதற்கு மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் வரும் 18.07.2026 அன்று இராமேஸ்வரம் வட்டம், இராமேஸ்வரம், வட்டாட்சியர் அலுவலகத்திலும், 25.07.2026 அன்று இராமநாதபுரம் வட்டம், இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 01.08.2026 அன்று திருவாடானை வட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.08.2026 அன்று பரமக்குடி வட்டம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் , 16.08.2026 அன்று கமுதி வட்டம், கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார் .
மாவட்ட செய்தியாளர்.
