வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் நகரம் பிச்சனூர்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலின் 27-வது ஆண்டு திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு, அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில், மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கைத்தறி காவலன், சமூக ஆர்வலருமான மற்றும் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கார்த்திக் ராம சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில், யசோதா, பாக்கியராஜ், யுவராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் எஸ். ரமேஷ், இந்த ஆண்டும் 7 சிப்பம் அரிசியில் இந்த சுவையான சிக்கன் பிரியாணி தயாரித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினார்.

அன்னதானத்தில் பங்கேற்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று உணவை பெற்றுச் சென்றதுடன், சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தொடர்ந்து பல ஆண்டுகளாக அன்னதான சேவையை மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் எஸ். ரமேஷுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானம், பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது குருப்பிடத்தக்கது.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி. / 8939476777
