சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடபுறம் பைபாஸ் ரோட்டின் அருகே சிவகங்கை நகராட்சியின் ஒட்டுமொத்த குப்பைக்கழிவுகளும் மருத்துவமனையின் கழிவுகளும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதாரம் இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி குப்பைக் கழிவுகளை நகரின் வெளிப்புறப் பகுதிக்கு கொண்டு போய்ச் சேர்க்க சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் , நகராட்சி ஆணையர் ஆகியோர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. அவர்கள் நேற்றுக் காலையில் அந்த இடத்திற்கு சென்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் தனது தனிப்பட்ட முயற்சியில் இரண்டு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்து குப்பைக் கழிவுகளை ஒன்று சேர்த்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுத்தார்.

அப்போது எம்.எல். ஏ. குழந்தைராணி நாச்சியார் செய்தியாளர்களிடம் பேசியதாவது ; சிவகங்கை நகரின் குப்பைக் கழிவுகளை ஏற்கனவே சுந்தர நடப்பு என்ற இடத்தில் தரம் பிரித்து உரமாக்குவது தொடர்பான பணிகள் நடைபெறும் போது அதில் வழக்கு ஏற்பட்டு நின்றுவிட்டது. இதன் பிறகு நகராட்சி நிர்வாகம் குப்பைக் கழிவுகளை கொட்ட சரியான இடத்தை தேர்வு செய்யவில்லை. இதனால் மருத்துவமனையின் வடபுறம் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வந்தனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திடம் மூன்று முறை பேசி மாற்று இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. சிவகங்கை நகராட்சி நிர்வாகம் இனி மேலும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனத் தெரிகிறது.

எனவேதான் எங்கள் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் இப்போது இதை சுத்தம் செய்கிறோம். இந்தப் பிரச்சனை நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன் அவர்கள் இதை சரிசெய்யவில்லை? என்பது வேதனை அளிக்கிறது. இனி இந்த இடத்தைச் சுற்றி வேலி அமைக்க முயற்சி செய்வேன். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு போய் தனியாக இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை நகராட்சி கழிவுகளை துரிதமாக அப்புறப்படுத்தியதால் எம்.எல்.ஏ. அவர்களுக்கு சிவகங்கை நகர் மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர் செய்திகள்
செய்திகள் ; ஆனந்த் / இந்திய எதிரொலி / 8939476777
