கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பு பகுதியில் இரண்டு கோயில்கள் உள்ளன. அதில், ஒன்று ராமர் கோவிலில் மற்றொன்று அதன் அருகே உள்ள அய்யா வழி கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் அருகருகே இருந்து வருகின்றன.

அந்த கோயில்களில் தினமும் பூசாரிகள் இரவு பூசைகளை முடித்துவிட்டு வழக்கும் போல் நேற்று கோயிலை பூட்டி சென்று உள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல், கோவிலில் பூஜை வைப்பதற்காக காலையில் பூசாரி வந்துள்ளார். அப்போது கோவிலில் கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கண்காணிப்பு கேமரா இருக்கும் அறைக்கு சென்று பார்த்ததில் கேமரா செட் முழுவதையும் திருடர்கள் திருடி சென்றுள்ளனர். உடனடியாக கோவில் பூசாரி கோவில் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார். கொட்டாரம் சந்திப்பில் உள்ள இரண்டு கோயில்களிலும் ஒரே நேரத்தில், கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
