சிவகங்கை மாவட்டத்தில், இன்று புவிசார் குறியீடு பெற்று மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நிதி உதவி பெற்ற மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள்வசிக்கும் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும், மானாமதுரை சிப்காட்டில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் மூலதன மானிய திட்டத்தின் கீழ் பயன் பெற்ற தி/ள்.சுப்ரீம் கேம்ப்டெக் ஆர்கானிக்ஸ் எல்.எல்.பி. நிறுவனத்தையும் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற்ற தி/ள். ராவியேட் காயர் நிறுவனத்தையும், பூவாளியில் இயங்கும் EID Parry Pvt. Ltd நிறுவனத்தையும் ஆய்வு மேற்கொண்டு மற்றும் பயனாளிகளிடம் திட்டங்களின் மூலம் பயன் பெற்ற விவரங்கள், மானியம் பெறப்பட்ட விவரங்கள், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், அவர்கள் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777
