திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதில் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பெரும்பாலான காப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிப்காட் ஒட்டியுள்ள பார்த்தபாளைம் ஊராட்சிக்குட்பட்ட ஜெயின் மெட்டல் காப்பர் தொழிற்சாலை சுமார் 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் மூன்று ஷிப்ட் பணியாளர்கள் வேலை செய்து வருவதும் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பர்னஸ் ஒன்று வெடித்துள்ளது.

அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அது மட்டுமல்ல அருகே பணியாற்றி வந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக ,சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை மற்றும் வெங்கடேஸ்வரா மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவமானது கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தீயாகப் பரவியது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சசிதரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்பொழுது சிப்காட், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இது சம்பந்தமாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில் தீயில் கருகி உயிரிழந்த பீகாரைச் சேர்ந்த ரவி ரஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிம்பர்சிங்(24), பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பூசன் குமார் (25), ஓம் குமார் (22), ரஞ்சித் குமார் (35), ராஜா பாபு (26), ரன்வீர் குமார் (26), பிரின்ஸ் குமார் (27) ஆகியோர் என்பது தெரியும் வந்தது மேலும் விமர்சிங் மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் ;

சிப்காட் பகுதியில் உள்ள ஜெயின் மெட்டல் தொழிற்சாலையில் ஏற்கனவே குழந்தை தொழிலாளிகள் பணியாற்றியுள்ளதும் கூறப்படுகிறது, பழை பேட்டரி, ஒயர்கள் காப்பர்களை உருக்கும் பொழுது கருப்பு துகள்கள் வரும் வெளியேறும் கருப்பு துகள்கள் பழம்பாளையம், சித்தராஜ் கண்டிகை சுற்றுவட்டார பகுதிகளில் பரவி ஏற்கனவே மூச்சுத் திறன் ஏற்படுவதும் வழக்கம் இது சம்பந்தமாக தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் சிப்காட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படாததால் வருத்தம் அளிக்கிறது.

இது சம்பந்தமாக போலீசார் மற்றும் தொழிலாளர் நலத்துறை, சிப்காட் நிர்வாகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகிய அனைத்து துறை அதிகாரிகளும் தொழிலாளர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

செய்திகள் ; யாகோப் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed