விருதுநகர் புல்லுக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் சிலர் முயல் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற வனத்துறையினர் முயல் வேட்டையாடிய 6 பேரை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.


பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த வேட்டையாடப்பட்ட ஒரு முயல் மற்றும் வலை ஆகியவற்றையும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் முயல் வேட்டையாடிய ஆறு பேருக்கும் சேர்த்து 30 ஆயிரம்
அபராதம் விதித்தனர்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் கூறும் போது வனப்பகுதியில் முயல் உள்ளிட்ட எந்த ஒரு வனவிலங்கையும் வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
