சிவகங்கையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஒக்கூரை அடுத்த இராமலிங்கபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் ஜூலை 19 ம் தேதிக்கு மேல் நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜோசப்விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தெரிகிறது. இந்த விழாவிற்கான மேடை , பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த விழாவில் சிவகங்கை தொழிலதிபர் வள்ளல் பச்சேரி சி.ஆர். சுந்தரராஜன் அவர்களின் தலைமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இணைய உள்ளதால் விழாவிற்கான ஏற்பாடுகளை இவரே சிறப்பாக செய்து வருகிறார்.
செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777
