ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகில் கோதை நகர் பகுதி உள்ளது இங்கு ஒரு குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்து பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது அந்த வழியே சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் புகை மண்டலம் காரணமாக வாகனம் ஓட்ட பெரிதும் சிரமம் அடைந்தனர் இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அதிகாரி சுந்தர்ராஜன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்து விட்டனர். குப்பை கிடங்கு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
