விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அம்ரித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் மற்றும் மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயில்வே அதிகாரிகளுடன் பார்வையிட்டனர். ஹரி தந்த அதிகாரிகளை ராஜபாளையம் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் ராஜபாளையம் ரயில் நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

ராஜபாளையம் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் சுகந்தம் என்.எஸ். ராமகிருஷ்ணன், ஹரி மற்றும் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பொன்னாடை அணிவித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ராஜபாளையத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க கோரியம் ராஜபாளையம் வழியாக இயங்கும் சிலம்பு ரயிலை தினமும் இயக்க கோரியும் கொல்லத்தில் இருந்து ஈரோட்டுக்கு ராஜபாளையம் வழியாக ரயில் விடகொரியும் ராஜபாளையத்தில் ரயில்வே முனையம் ( டெர்மினல்) அமைக்கக்கோரியம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய கோரிக்கை மனு கொடுத்தனர் அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்

மேலும், எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கம் சார்பில் ராஜபாளையம் செயலாளர் கணேசன், மதுரை உதவி கோட்ட செயலாளர் சீதாராமன் உள்பட ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி பகுதிகளைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். ராஜபாளையம் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த ரயில்வே அதிகாரிகள் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு உத்தரவிட்டனர் மேலும் பொதுமக்கள் ரயில் பணிகள் சார்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
