
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் கணினி பயன்பாட்டுடன் கூடிய வணிகவியல் துறை சார்பிலான பில்கேட்ஸ் சங்க தொடக்க விழா சிறப்பாக நடத்தப்பட்டது. கல்வியின் மேன்மைக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்து அரங்கமும் கல்லூரி முதல்வர் டாக்டர் சி இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞான வேலாயுதம் வாழ்த்துறையில் ராஜபாளையம் ராஜக்கள் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எம் வைத்தியநாதன் சிறப்புரையாற்றினார்.

ஏஐ நுண்ணறிவில் திரும்பிட செயல்படுத்துவது குறித்து சிறப்பான விளக்கம் அளித்தார். விழாவில் டாக்டர் டேவிட் லாரன்ஸ் மற்றும் பாபு ஆகியோர் எழுதிய மிஷன் லேர்னிங் (Machine Learning) என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. டாக்டர் எம் வைத்தியநாதன் புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் டாக்டர் சி ராமகிருஷ்ணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழாவில், கல்லூரி முதுகலை வணிகவியல் (கணினி பயன்பாட்டு துறை) மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777
