விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் வைத்து விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் பிராஞ்ச் துறை சார்பில் சைபர் கிரைம் குற்றங்களை தடுத்தல் மற்றும் போதை விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெற்றது ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதல்வர் சி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிராஞ்ச் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். சைபர் கிரைம் குற்றங்கள் ராஜபாளையம் பகுதியில் அதிகமாக நடப்பது குறித்தும் அதை தவிர்த்தல், மற்றும் அது குறித்த புகார்களுக்கு 1930 என்ற எண்ணிற்கு புகார் செய்தல் உட்பட பல்வேறு விபரங்கள் தெரிவித்தார்.

மேலும் ராஜபாளையம் டிஎஸ்பி பஸீனா பீவி, ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்கள். முடிவில் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞான வேலாயுதம் நன்றி கூறினார் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed