தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் கொங்கு மண்டல மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய்எம்சிஏ ஹாலில் நடைபெற்றது.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தேசியத் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அடைக்கலம் உள்ளிட்ட சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தேசியத் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் அடையாள அட்டை வழங்கினார். இக்கூட்டத்தில், தேசிய பொதுச் செயலாளர் அன்புராஜ், தேசிய பொருளாளர் கிளிண்டன், தேசிய தலைமைச் செயலாளர் ஜான் ஜேக்கப், தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் வேதமுத்து, பொதுச்செயலாளர் ராபட், பொருளாளர் பிரான்சிஸ் ஆசைத்தம்பி, கிறிஸ்தவ முன்னணி தலைவர் சரவணன், அமைப்பு செயலாளர்கள் பால் ஆன்ரூஸ், செல்வராஜ், மாநில செயலாளர்கள் விக்டர் ராமசாமி, ஏஞ்சல் சுதா, மாநிலத் துணைத் தலைவர் சார்லஸ் ஹென்றி, மாநில துணைச் செயலாளர்கள் கார்த்திகேயன், செல்வராஜ், ஜோசப் கிசான் சிங், ராமர் (எ) லாரன்ஸ், வைஷாலினி, சாமுவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்டீன் ஜெயமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராபட் ரமேஷ், ஆண்ரூஸ், மாநில மகளிர் அணி துணை தலைவர் இந்திராணி மற்றும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் செய்தியாளர் ; கா. தங்கதுரை
9442979457 / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *