திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர், ஸ்ரீ முரளி நகர்,அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில்
மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிராமதேவதை வழிபாடுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சியானது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்,லஷ்மிஹோமம், கோபூஜை,அஷ்டாதச க்ரியைகள், கண்திறத்தல், தீபாராதனை விநாயகர் ப்ரதிஷ்டை பிரசாதம் வழங்கப்பட்டது.இரண்டு கால யாக பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்று கடம் புறப்பட்டது.
பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்திற்கும்,கற்பக விநாயகர் ஆலய பரிவாரங்களுக்கும் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின் தீபாராதனை நடந்து சுவாமி பிரசாதமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, ஆலய நிர்வாகிகள் ராஜேந்திரன், கஜேந்திரன், கசகத்த பெருமாள், கே. கோபால், மூக்கையா கோபால் மற்றும் ஸ்ரீ முரளி நகர் கிராம மக்கள் செய்திருந்தனர். மீஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed